19 உயிர்களைப் பலிவாங்க காரணமாக அமைந்திருக்கிறது

பெங்களூருவுக்கு வேகமாகச் செல்லும் எண்ணத்தில், கன்டெய்னர் லாரி டிரைவர் ஹேமந்த்ராஜ், ஓய்வின்றி இயக்கியுள்ளார்.'துாக்கக் கலக்கத்தில்தான் லாரி டிரைவர், மையத்தடுப்பின் மீது லாரியை ஏற்றியுள்ளார். பின், அது கட்டுப்பாட்டை இழந்து, 19 உயிர்களைப் பலிவாங்க காரணமாக அமைந்திருக்கிறது. மையத்தடுப்பின் மீது ஏறிய பின்தான், லாரி டயர் வெடித்திருக்க வேண்டும். டயர் வெடித்ததால்தான் விபத்து நேர்ந்ததாக கூறுவது, திசை திருப்புவதற்காகத் தான்' என்று, விபத்து கோரத்தைப் பார்த்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கூறுகின்றனர்.

விபத்துக்கு காரணமான டிரைவர் மீது, 304ஏ (விபத்து) என்று சாதாரணப்பிரிவில், வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கொலை குற்றங்களுக்கு நிகரான பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், டிரைவர் மட்டுமல்லாது, கன்டெய்னர் லாரியின் உரிமையாளர் மீதும் வழக்கு பாய வேண்டும். அப்போது தான், எதிர்காலத்தில், இதுபோன்ற கோர விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். விபத்தில் பலியானவர்களின் உயிர்கள் விலைமதிப்பற்றவை. 19 பேரை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு எந்த வார்த்தைகளும் இல்லை.